தமிழ்நாடு

திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: ராஜ்யசபாவில் கூடியது பலம்!

Published

on

தமிழகத்தில் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலியாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒரு பதவிக்கு மட்டும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்வது உள்பட அனைத்து தேதிகளும் முறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைமையகம் சமீபத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் யாரும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தலில் ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய பாதிக்கும் அதிகமான எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தமிழகத்தில் 234 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் பாதிக்கும் அதிகமென்றால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய முடியும். ஆனால் திமுகவுக்கு 133 எம்எல்ஏக்கள் இருப்பதால் திமுக வேட்பாளர் எம் அப்துல்லா அவர்கள் தேர்வு செய்யப்படுவது உறுதி என்று கூறப்பட்டது,

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிட எம்.எம்.அப்துல்லா அவர்கள் போட்டியின்றி தேர்வானார் என அறிவிக்கப்பட்டுள்ளது,

ஏற்கனவே ராஜ்யசபாவில் திமுக 7 எம்பிக்கள் இருக்கும் நிலையில் தற்போது அது 8ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version