தமிழ்நாடு

கத்தியுடன் சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த திமுக பிரமுகர் கைது!

Published

on

திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் சென்னை திருவான்மியூர் ஒடைக்குப்பம் 179வது வார்டில் அதிமுக சார்பில் ஜமுனா கணேசன் என்பவரும் திமுக சார்பில் கயல்விழி என்பவரும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்ற திமுக பிரமுகர் கதிர் மற்றும் திமுக வேட்பாளர் கயல்விழியின் கணவர் ஜெயக்குமார் ஆகியோர் திடீரென வாக்குச் சாவடிக்குள் நுழைந்து இயந்திரங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இது குறித்து அதிமுக வேட்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கதிர் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது அரசு சொத்தை சேதப்படுத்துதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக வேட்பாளர் ஒருவரின் கணவர் மற்றும் திமுக பிரமுகர் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கி விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version