தமிழ்நாடு

திமுக-விசிக தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்து: விசிகவுக்கு இவ்வளவு தானா?

Published

on

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது அந்த தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இன்றைய பேச்சுவார்த்தையில் திருமாவளவன் கலந்து கொண்டார் என்பதும் முக ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளை மட்டுமே பெற்றுக் கொண்டு திருப்தி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு மக்கள் நல கூட்டணி என்ற தனி கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தற்போது 6 தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version