தமிழ்நாடு

கையெழுத்தானது திமுக-மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒப்பந்தம்: எத்தனை தொகுதிகள்?

Published

on

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, இடது கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகள் ஆகிஅ கட்சிகள் ஏற்கனவே தொகுதி உடன்பாடு குறித்து கையெழுத்திட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் இடையில் இழுபறி ஏற்பட்டாலும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோபாலகிருஷ்ணன் அவர்கள் ’அதிமுக பாஜக கூட்டணியை வீழ்த்துவதே பிரதானம் என்று தெரிவித்தார். இதனையடுத்து தற்போது திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தொகுதி உடன்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், மதிமுகவுக்கு 6 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இடது கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் 6 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகள், முஸ்லிம் லீக் 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள், என ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version