தமிழ்நாடு

பாஜகவில் இணைந்த புதுவை அரசு கவிழ காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சிலர் திடீரென தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது என்பதும் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுவை அரசு விழுவதற்கு காரணமாக இருந்த இரண்டு எம்எல்ஏக்கள் இன்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் புதுவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது அவருடைய முன்னிலையில் புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்

காரைக்காலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்குமார் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருந்தவர் என்பதும் திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் வெங்கடேசன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜான் குமார் வெங்கடேசன் உள்பட 5 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால் தான் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி புதுச்சேரி சபாநாயகர் சிவகொழுந்துவின் சகோதரர் ராமலிஙக்ம் என்பவரும் இன்று பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version