தமிழ்நாடு

திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தை: 50 தொகுதிகள் கேட்பதாக தகவல்!

Published

on

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி இன்று தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்த இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் குண்டுராவ் உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்த இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகள் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை ஒற்றை இலக்கங்களில் தான் தொகுதிகளை வழங்க திமுக முடிவு செய்திருப்பதாகவும், அதிகபட்சம் 20 தொகுதி வரை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version