தமிழ்நாடு

திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கின்றதா பேரறிவாளன் விடுதலை?

Published

on

திமுக காங்கிரஸ் கூட்டணியை பேரறிவாளன் விடுதலை உடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது .

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர் என்பதும், இன்று வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் திமுக உள்பட மற்ற அனைத்து கட்சிகளும் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பேரறிவாளன் விடுதலையை ஆதரித்த நிலையில் அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது .

ஏற்கனவே திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போது அது உண்மையில் நடந்து விடும் என்று அரசியல் பிரமுகர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசு இதுகுறித்து கூறும்போது பேரறிவாளன் குற்றமற்றவர் என்றோ, நிரபராதி என்றும் நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை என்றும் சட்டத்தின்படி இது சரி என்றாலும் தர்மத்தின்படி தவறு என்றும் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்றனர் என்றும் அதனால் கருணை அடிப்படையில் விடுதலை என்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேரறிவாளன் விடுதலையை அடுத்து மற்ற ஆறு பேரின் விடுதலையை மத்திய மாநில அரசு தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த பிரச்சனைகளால் எந்தவித சிக்கலும் இல்லை என்றும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை வைத்து திமுக காங்கிரஸ் கூட்டணியை யாரும் விரிசலை ஏற்படுத்த முடியாது என்றும் கூட்டணி வேறு, இந்த பிரச்சனை வேறு என்று கூறினார்.

 

seithichurul

Trending

Exit mobile version