தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்திய திமுக: பரபரப்பு தகவல்!

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக திமுக போட்டி வேட்பாளரை களமிறக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12வது வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பரமசிவம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என அதிகாரபூர்வ சின்னம் இருக்கும் நிலையில் தான் உதயசூரியன் சின்னத்தில் ஏன் போட்டியிட முடியாது என பரமசிவம் மறுத்து உள்ளதாக தெரிகிறது.

இது குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 12 வது வார்டில் போட்டி வேட்பாளரை திமுக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தது. இதனால் ஒரே கூட்டணியில் உள்ள திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது .

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னம் இருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என்றும் திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறி போட்டி வேட்பாளரை நிறுத்தி உள்ளதாகவும் கூறி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version