தமிழ்நாடு

20ல் 14 போச்சா? அதிர்ச்சியில் தமிழக பாஜக தலைவர்கள்!

Published

on

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த 20 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளைப் பெற்றது என்பதும் அந்த 20 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த 20 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக போட்டியிட போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கும் நிலையில் இந்த தகவல் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக மோதினால் ஓரளவுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்தது என்பதும் ஆனால் பலம் பொருந்திய திமுகவுடன் மோதி வெற்றி பெறுவது என்பது பாஜகவுக்கு இயலாத ஒன்று என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

எனவே பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டால் பாஜகவின் வெற்றி கேள்விக்குறியே என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீதமுள்ள 6 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாஜக மற்றும் திமுக மோதும் 14 தொகுதிகள் என கருதப்படும் தொகுதிகள் பின்வருவன: திருவண்ணாமலை, நாகர்கோவில், ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, திருநெல்வேலி, தாராபுரம், மதுரை வடக்கு.

seithichurul

Trending

Exit mobile version