இந்தியா

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Published

on

நாடாளுமன்ற இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேகதாட்டு அணைக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

நேற்றும் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு முன்பு காகிதங்களை கிழித்து பறக்கவிட்டனர். இதனையடுத்து அதிமுக எம்பிக்கள் 26 பேரை 374 ஏ விதியின் கீழ் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இவர்களுக்கும் 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல மாநிலங்களவை தொடங்கியதும் மேகதாட்டு பிரச்சனை தொடர்பாக அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. பின்னர் அமைச்சர் நிதின் கட்கரி மேகதாட்டு பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளதாக அவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு கூறியும், அனுமதியைத் திரும்பப் பெற வேண்டுமென அதிமுக, திமுக எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அதிமுக, திமுக எம்பிக்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை அவையில் இருந்து வெளியேற்றும்படி கூறிய வெங்கைய்ய நாயுடு மாநிலங்களவையில் இருந்து திமுக, அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என உத்தரவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version