தமிழ்நாடு

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கை: இரண்டும் ஒன்றுதான்!

Published

on

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு கட்சிகளும் இன்று தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் ஒரே விஷயத்தை கூறியுள்ளது.

அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும். மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். தனியார்துறையிலும் இட ஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் எல்லாமே வலியுறுத்தப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. எதுவுமே உறுதியான வாக்குறுதியாக இல்லை.

அதே போல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், கல்வி கடன் ரத்து, கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தல், நீட் தேர்வு ரத்து, தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை போன்ற அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ளவைகள் இடம்பெற்றுள்ளது. ஒரே நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இரு கட்சிகளும் ஒரே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version