தமிழ்நாடு

திமுக எப்போதுமே வாரிசு கட்சி தான்: உதயநிதி ஸ்டாலின் கட் அவுட்டுகள்!

Published

on

தஞ்சையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் மேடையில் முன்னணி தலைவர்கள் இருந்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் படம் வைக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் வெளியே தெரியவர நடந்த தவறுக்கு உதயநிதி ஸ்டாலின் இனிமேல் நடக்காது என டுவிட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் படம் இடம்பெற்றது குறித்து அந்த கட்சி வாரிசு கட்சி என அதிமுக விமர்சித்துள்ளது.

நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவில் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமானால் கலைஞரின் மகளாகவோ அல்லது மகனாகவோ இருக்க வேண்டும். தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கட் அவுட்டுகளை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். திமுக எப்போதுமே வாரிசு கட்சி தான் என குற்றம் சாட்டினார்.

seithichurul

Trending

Exit mobile version