தமிழ்நாடு

மேயர் பதவிக்கு குறிவைக்கும் கூட்டணி கட்சிகள்: எப்படிசமாளிக்க போகிறார் முக ஸ்டாலின்?

Published

on

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக மேயர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவி கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மேயர் பதவி குறித்து விரைவில் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியையும் நகர்மன்றத் தலைவர் பதவியையும் கொடுக்க திமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வேண்டுமானால் துணைமேயர் அல்லது துணை நகர்மன்ற தலைவர் பதவியை ஒரு சில கட்சிகளுக்கு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சமாளிப்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கே என் நேரு தலைமையில் ஒரு குழு அமைத்து உள்ளதாகவும் அந்த குழுவில் செந்தில்பாலாஜி, துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உள்ளதாகவும் இந்த குழுவினர் நடைபெற்று முடிந்த தேர்தலில் கூட்டணி கட்சியினர் தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு உள்ளடி வேலை செய்தது குறித்த ஆதாரங்களை காண்பித்து இப்படிப்பட்ட வேலைகள் செய்த நீங்கள் மேயர் பதவி கேட்பது எந்த வகையில் நியாயம் என பதிலடி கொடுக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதேநேரத்தில் மேயர், நகர்மன்றத் தலைவர் பதவியை கிடைக்காவிட்டால் கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியுடன் தான் கூட்டணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவை பொறுத்தவரை தனித்துப் போட்டியிட்டதால் இந்த பிரச்சினை இல்லை என்று என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version