தமிழ்நாடு

‘நான் தான் க்ளீன் பண்ணுவேன்..’ ஆகாயத்தாமரை அகற்றுவதில் திமுக-அதிமுக மோதல்.. கடைசியில் நடந்த காமெடி!

Published

on

ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை தூர்வாறும் பணியில் அ.தி.மு.க. – தி.மு.கவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பிறகு, மாநகராட்சி ஊழியர்களே தூர்வாறும் பணியை மேற்கொண்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

சென்னை மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளர்ந்து கிடந்தன. தி.மு.க. சார்பில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படும் என தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திமுகவினர் அறிவித்த நேரத்திற்கு முன்பாகவே அதிமுகவினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெ.கே. மணிகண்டன் சார்பில் மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் தி.மு.க. பகுதி செயலாளர் எஸ்.வி. ரவிசந்திரன் சார்பில் படகுகளுடன் தூர்வாறும் பணியில் ஈடுபட்டனர். பிறகு அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் அதிகளவில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. அங்குவந்த மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சவுரிநாதன், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் தி.மு.க.வினரை கலைந்து போக செய்தனர்.

ஏரியை மாநகராட்சி ஊழியர்களே சுத்தம் செய்ய வேண்டும். வேறு எவரும் ஈடுபட கூடாது என கூறினார். இதனை போலீசார் ஏற்று கொண்டனர். அதன் பிறகு ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை மாநகராட்சி ஊழியர்களே அகற்றி சுத்தம் செய்தனர்.

seithichurul

Trending

Exit mobile version