தமிழ்நாடு

3வது இடமெல்லாம் இல்லை, 5வது இடம் தான் பாஜகவுக்கு: வாக்கு சதவிகித விபரங்கள்!

Published

on

தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான் என ஒருபக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும், இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பாஜகவுக்கு மூன்றாவது இடம் எல்லாம் கிடையாது 5வது இடம் தான் என பதிவான வாக்கு சதவீதம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் திமுக 69% மாநகராட்சிகளிலும், 61% நகராட்சிகளிலும் 57% பேரூராட்சிகளிலும் பெற்று உள்ளது.

இதனை அடுத்து அதிமுக இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும், சிபிஎம் நான்காவது இடத்தையும் வாக்குசதவிகிதம் அடிப்படையில் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது இடத்தில் உள்ள பாஜக மாநகராட்சிகளில் 1.60 சதவீதமும், நகராட்சியில் 1.46 சதவீதமும், பேரூராட்சிகளில் 3 சதவீதமும் வாக்குகள் பெற்று உள்ளன. எனவே திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், ஆகிய நான்கு கட்சிகளை அடுத்து ஐந்தாவது இடமே வாக்கு சதவீத அடிப்படையில் பாஜகவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் பெற்ற ஓட்டுகள் என்றும் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் தனித்து போட்டியிட்டு கிடைத்த வாக்கு சதவீதம் என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version