தமிழ்நாடு

அதிமுகவுக்கு கைகொடுக்காத கூட்டணி, திமுக கூட்டணி கட்சிகள் அபாரம்!

Published

on

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

இந்த தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், மதிமுக, விசிக தலா 4 தொகுதிகளிலும், சிபிஎம், சிபிஐ தலா 2 தொகுதிகளிலும் அதேபோல் ஒரு தொகுதி பெற்ற கட்சிகளில் 5 கட்சிகள் முன்னிலையிலும் உள்ளன.

ஆனால் அதிமுக கூட்டணியில் பாமவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக வெறும் 5 தொகுதிகளிலும் பாஜக வெறும் 3 தொகுதிகளிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளன. தமாக பூஜ்யமாக உள்ளது. அதிமுக கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில் அதில் 71 தொகுதிகளில் அதிமுக மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version