தமிழ்நாடு

‘நீங்க என்ன எம்ஜிஆரா? ஜெயலலிதாவா? மிஸ்டர் பழனிசாமி..!’- விஜய பிரபாகரன் ஆவசேம்

Published

on

இனிமே எக்காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று தேமுதிகவின் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது தனித்துத் தேர்தலைச் சந்திக்குமா என்று தெரியவில்லை. தற்போது அமமுகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக கூட்டணி முறிவு தொடர்பாக, விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், “நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் 09.03.2021 முதல் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி முறிவு காரணமாக அதிமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறது தேமுதிக. இந்நிலையில் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன், “எடப்பாடி பழனிசாமி ஒன்றும் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ கிடையாது. அப்புறம் ஏன் இவ்வளவு ஆணவத்தோடு அலைகிறார். நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறோம், இனி அதிமுகவோடு கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டோம்” என்று ஆவசேமாக பேசியுள்ளார்.

 

Trending

Exit mobile version