தமிழ்நாடு

எடப்பாடியில் நாங்கள் போட்டியிட்டால் முதல்வருக்கு டெபாசிட் கிடைக்காது: தேமுதிக எச்சரிக்கை!

Published

on

எடப்பாடி தொகுதியில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தினால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என தேமுதிக நிர்வாகி ஒருவர் எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள தேமுதிகவுக்கு இன்னும் தொகுதிகளை ஒதுக்கும்பணியை அதிமுக முடிக்கவில்லை. இருதரப்பு தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இன்னும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

அதிமுக தரப்பில் இருந்து 15 தொகுதிகள் தருவதற்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் தேமுதிக தரப்பில் பாமகவுக்கு கொடுத்தது போல் 23 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து இந்த இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையவில்லை.

இந்த நிலையில் தேமுதிக இன்று காலை பத்து முப்பது மணிக்கு மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் அதிமுகவின் டெபாசிட் பறிபோகும் என்றும்,. அந்தத் தொகுதியில் போட்டியிடும் முதல்வருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் தேமுதிக நிர்வாகி இளங்கோவன் என்பவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருக்காவிட்டால் அதிமுக என்ற கட்சியை இருந்திருக்காது என எல்.கே.சுதீஷ் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே,

Trending

Exit mobile version