தமிழ்நாடு

காங்கிரஸை நம்பி காத்திருக்கும் தேமுதிக: கடைசியில் நிலைமை இப்படி ஆகிவிட்டதே!

Published

on

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேமுதிக ஒரு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே எதிர் கூட்டணியிலும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. எந்த கூட்டணி அதிக தொகுதிகள் கொடுக்கிறதோ அந்த கூட்டணிக்கு ஓகே சொல்லும் வழக்கத்தை கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத கட்சியாக தேமுதிகவை அனைவரும் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் திமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நடக்கிறதாம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே காங்கிரஸ் கட்சி வெளியேறுமா என்று தேமுதிக காத்திருப்பதாகவும் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் முடிவு தெரியும் வரை அதிமுக கூட்டணிக்கு எந்தவித பதிலும் கூறாமல் அமைதியாக இருக்க தேமுதிக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து கூறும்போது கடைசியில் தேமுதிகவின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று பரிதாபப்பட்டு வருகின்றனர்.

Trending

Exit mobile version