தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தா ஹாப்பி அண்ணாச்சி: அதிமுகவுக்கு செக் வைக்கும் விஜயபிரபாகரன்

Published

on

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் மகிழ்ச்சி தான் என்று தேமுதிகவின் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது தனித்துத் தேர்தலைச் சந்திக்குமா என்று தெரியவில்லை.

இது தொடர்பாக, விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில், “நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் 09.03.2021 முதல் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி முறிவு காரணமாக அதிமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறது தேமுதிக. இந்நிலையில் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன், ‘அதிமுகவை நாங்கள் உச்சத்தில் வைத்துப் பார்த்தோம். ஆனால் அவர்கள் எங்களைக் கீழே தள்ளிவிட்டுள்ளார்கள். இதற்கு தக்கப் பாடம் புகட்டப்படும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்துவரை, இது அதிமுகவுக்கு எதிரான தேர்தல். அவர்களுக்கு எதிராக நாங்கள் களப்பணி ஆற்றுவோம். திமுக இந்த முறை வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மகிழ்ச்சியே’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version