தமிழ்நாடு

விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதி: தேமுதிக விளக்கம்!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து தேமுதிக தலைமை விளக்கம் அளித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருக்கிறார் என்பதும் அவ்வப்போது மருத்துவமனையில் சென்று உடல் நல பரிசோதனை செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்தவகையில் நேற்று இரவு திடீரென விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன என்பது குறித்து விளக்கமளித்து தேமுதிக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி விஜயகாந்த் அவர்கள் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜயகாந்த் உடல் நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் தேமுதிக தொண்டர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேமுதிக தற்போது உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாகவும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version