தமிழ்நாடு

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது: பிரேமலதா விஜயகாந்த்

Published

on

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியையும் திமுக எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் நேற்று விழா ஒன்றில் பேசிய தேமுதிகவின் பொருளாளர்பிரேமலதா விஜயகாந்த், ‘ மாநகராட்சி, நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றும் அதிகார பலம் பண பலத்தை எதிர்த்து தேமுதிக களத்தில் இறங்குகிறது என்றும் மக்கள் கேப்டனுக்கும் தேமுதிகவுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆட்சிக்கு வந்து ஓரிரு மாதங்கள் என்றால் விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் தற்போது 9 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்ன வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும் மாறாக நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதி அளித்துள்ளார். ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் கும்பகோணம் மாவட்டத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக இந்த இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றும் இந்த கோரிக்கையை திமுக அதிமுக இரண்டுமே நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version