தமிழ்நாடு

அமமுகவுடனும் கூட்டணி இல்லை: தனித்து போட்டியிடும் தேமுதிக!

Published

on

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலிலும், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனை அடுத்து தேமுதிக சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதுமட்டுமன்றி அதிமுகவையும் முதல்வரையும் கடுமையாக தேமுதிகவினர் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிகவை தங்களுடைய கூட்டணிக்கு வருமாறு கமல் மற்றும் தினகரன் கட்சி கூட்டணியினர் அழைப்பு விடுத்தனர். இதில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தேமுதிகவுக்கு 50 தொகுதிகளை தரலாம் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் அமமுக உடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் இதனை அடுத்து தேமுதிக தனித்து களம் காண தயாராகி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் 6 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளரையும் தேமுதிக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியல் இதோ: பாகூர் – வேலு, காலாப்பட்டு – ஹரிஹரன், உப்பளம் – சசிகுமார், நெடுங்காடு – ஞானசேகர், திருநள்ளாறு – ஜிந்தாகுரு.

seithichurul

Trending

Exit mobile version