தமிழ்நாடு

இப்போது தேமுதிக விஜயகாந்திடமே இல்லை.. கட்சியிலிருந்து வெளியேறியவர் உளறல்

Published

on

தேமுகதி கட்சி இப்போது விஜயகாந்திடமே இல்லை என்றும் கட்சி தடம் மாறி சென்று கொண்டிருப்பதாகவும் அக்கட்சியிலிருந்து வெளியேறிய மதிவாணன் கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் மதிவாணன். இவர் தேமுதிக வட சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மதிவாணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், நேற்று திடீரென்று தேமுதிக கட்சியிலிருந்து விலகிய மதிவாணன் நேராக அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதுகுறித்து பேசிய மதிவாணன், தேமுதிக கட்சி இப்போது விஜயகாந்திடமே இல்லை என்றும் 41 தொகுதிகள் கொடுக்கும் கட்சியிடம் தான் கூட்டணி வைக்க வேண்டும் என பிரேமலதா கொள்கை வகுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அப்படி என்ன கொள்கை என்று விலாசிய மதிவாணன், தேமுதிக கட்சி தொடங்கிய நோக்கத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டதாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version