தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்: விரைவில் அறிப்பு!

Published

on

மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து வருகிறது. அதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் தேமுதிகவையும் சேர்க்க தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து பிடிகொடுக்காமல் இழுத்தடித்து வந்த தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே முயற்சித்தது. ஆனால் அதிமுக மட்டுமே தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் பிரதமர் மோடி. எனவே இன்றே தேமுதிக கூட்டணி இறுதி செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் தனித்தொகுதிகளாக வழங்குவதாக அதிமுக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version