தமிழ்நாடு
தேமுதிக வேட்பாளர் பட்டியலில் விஜய்காந்த் பெயர் இல்லை: தொண்டர்கள் அதிர்ச்சி!
அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தேமுதிக, அமமுக கூட்டணியில் இணைய கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்பது தெரிந்ததே. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இந்த வேட்பாளர் பட்டியலில் விஜயகாந்த் பெயர் இல்லை என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் விஜயகாந்த் முதல் முதலாக போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் மட்டுமின்றி அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் மச்சான் சுதீஷ் ஆகியோரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக வேட்பாளர் பட்டியல் குறித்த தகவல் இதோ: