தமிழ்நாடு

கூட்டணி முடிவாகும் முன்பே நேர்காணலை தொடங்கும் தேமுதிக: என்ன திட்டம்?

Published

on

கூட்டணி முடிவாகும் முன்னே நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளதால் என்ன திட்டம் வைத்திருக்கிறது அக்கட்சி என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக இன்று கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 12 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறப்பட்டதால் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இருந்ததால் அந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் நாளை பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல் கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைக்கலாம் என்றும் சசிகலாவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும் முன்பே தற்போது நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது. சமீபத்தில் தேமுதிக விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில் மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறதா? அல்லது வேறு கூட்டணிக்கு செல்கிறதா? என்ன திட்டம் என்பது புரியாமல் அரசியல் கட்சி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version