தமிழ்நாடு

அமமுகவுடன் கூட்டணியில் இணையும் தேமுதிக? 50 தொகுதிகள் என தகவல்!

Published

on

அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தினால் நேற்று தேமுதிக அக்கூட்டணியில் இருந்து விலகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருக்கிறது என்றும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இரகசிய பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருவதாகவும் விரைவில் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அக்கட்சிக்கு 50 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் இது குறித்த பேச்சுவார்த்தையில் தேமுதிக நிர்வாகிகள் பேசிக் கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமமுக சார்பில் பழனியப்பன், மாணிக்கராஜா ஆகியோர்களும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓட்டலில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை முடிந்தவுடன் விஜயகாந்த் மற்றும் தினகரன் சந்திப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version