பிற விளையாட்டுகள்

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற செர்பியா வீரருக்கு குவியும் வாழ்த்துக்கள்

Published

on

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இத்தாலி நாட்டின் பெர்ரெட்டினி என்பவரும் செர்பியா நாட்டின் ஜோகோவிச் என்பவரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை இத்தாலியின் பெர்ரெட்டினி வென்றாலும் அதனை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டுகளை செர்பியாவின் ஜோகோவிச் வென்று வென்றதை அடுத்து விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 6-7, 6-4, 6-3 என்ற செட்களில் வென்று சாம்பியன் ஆனார் ஜோகோவிச். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

செர்பியா நாட்டின் ஜோகோவிச் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் பெற்ற ரோஜர் தொடர் மற்றும் நடால் ஆகியோர்களின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சாம்பியன் கோப்பையை மட்டும் ஜோகோவிச் ஆறாவது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பாண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் ஆகிய சாம்பியன் பட்டங்களை வென்ற ஜோகோவிச் தற்போது விம்பிள்ட்ன் போட்டியிலும் வெற்றி வாகை சூடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் சாம்பியன் கோப்பையை வென்றார் ஜோகோவிச் அவர்களுக்கு உலகம் முழுவதிலுமுள்ள டென்னிஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதை அடுத்து அவரது பெயர் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version