அழகு குறிப்பு

Glowing Skin Secret: உங்கள் சருமத்தை பளபளப்பாக்க DIY ஃபேஸ் பேக்குகள் இதோ..!

Published

on

முகம் பளபளனு பொழிவுடன் இருக்க அனைவருக்கும் பிடிக்கும். இன்றைய சூழலில் நாம் சாலையில் பயணித்துவிட்டு விட்டிற்கு வந்து பார்த்தால் ஒரு இன்ச் தூசு ஒட்டி இருக்கும். முகத்தை பொழிவாக வைத்துக்கொள்ள சந்தையில் பல க்ரீம்கள், ஃபேஸ் மாஸ்க்குகள் இருக்கின்றன. ஆனா எளிமையாக விட்டில் இருந்து இயற்கை முறையில் நீங்களே ஃபேஸ் மாஸ்க் செய்து முகத்தை பொழிவாக வைத்துக்கொள்வது என விளக்கமாக பார்க்கலாம்.

  1. தேன்வாழைப்பழம்பச்சை பால் ஃபேஸ் பேக்

பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் உள்ள வாழைப்பழங்கள் மற்றும் தேன் சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. பால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை மெதுவாக அகற்ற உதவுகிறது. அனைத்து சருமதினரும் இந்த வாழைப்பழ ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.

  • 1 வாழைப்பழம், பச்சை பால் மற்றும் தேன் கலந்து மென்மையான பேஸ்ட்டாக எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பேஸ்ட்டில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
  • 15 நிமிடங்கள் விட்டுவிட்டு முகத்தைக் கழுவவும்.

    ஃபேஸ் பேக்

  1. கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

கடலை மாவில் புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்ததுள்ளது. அது கரும்புள்ளிகள், முகப்பரு உள்ளிட்ட பல்வேறு தோல் பிரச்சினைகளை எதிர்ப்பதில் பங்கு வகிக்கிறது. மேலும், மஞ்சள் சருமத்தை பளபளக்கும் ஒரு சிறந்த ஆதாரமாக செயல்படுகிறது.

  • ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
  • இந்த பேஸ்ட்டை உங்கள் சருமத்தில் சமமாக தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விடவும்.
  • பேஸ்ட் காய்ந்தவுடன், உங்கள் முகத்தை கழுவவும்.
  • எண்ணெய் சருமத்திற்கு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
  1. பப்பாளி ஃபேஸ் பேக்

பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளியின் விழுது முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது.

  • ஒரு கிண்ணத்தில் பப்பாளியை எடுத்துக் கொள்ளவும்.
  • 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
  • இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும்.
  • 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும்.

கடைகளில் கிடைக்கும் க்ரீம்களையே எப்போதும் பயன்படுத்துவதை விட அவ்வப்போது இதுபோன்ற இயற்கையான பொருட்களை அழகுக்கு பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும்.

Trending

Exit mobile version