தமிழ்நாடு

தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து முக்கிய அறிவிப்பு!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்பட பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தமிழக அரசின் போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் நவம்பர் 4ஆம் தேதி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி என்பதால் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சுமார் 10,000 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சொந்த ஊர் செல்பவர்கள் உடனடியாக சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version