சினிமா செய்திகள்

தீபாவளி சரவெடி பிகில்; கன்ஃபார்ம் பண்ண அர்ச்சனா கல்பாத்தி!

Published

on

தீபாவளிக்கு முன்பே பிகில் வெளியாகும் என்ற அறிவிப்புகள் சில நாட்களாக உலாவி வந்த நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சொன்ன மாதிரியே தீபாவளி சரவெடியாய் பிகில் வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

தெறி, மெர்சல் திரைப்படங்களுக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படமும் மெகா பிளாக்பஸ்டர் ஆகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பூரண நம்பிக்கையுடன் இந்த ட்வீட்டை போட்டுள்ளார்.

கார்த்தியின் கைதி மற்றும் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய இரு படங்களும் விஜய்யின் பிகிலுடன் தீபாவளி ரேஸில் போட்டி போட உள்ளது. மேலும், தீபாவளி ரேசில் எந்த எந்த படங்கள் கலந்து கொள்ள உள்ளன என்ற விபரங்களும் விரைவில் வெளியாகவுள்ளது.

நயந்தாரா, யோகிபாபு, கதிர், இந்துஜா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version