தமிழ்நாடு

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல வேண்டுமா? இன்று முதல் டிக்கெட் முன்பதிவு

Published

on

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இன்றுமுதல் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் மாதம் நான்காம் தேதி வரவுள்ளதை சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அக்டோபர் 4ஆம் தேதி என்பதால் இன்று முதல் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்லைன் மூலமும் பேருந்து நிலைய கவுண்டர்களிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி வியாழக்கிழமை வருகிறது என்பதால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பொதுமக்கள் மூன்றாம் தேதி இரவே சொந்த ஊர் செல்வதற்காக டிக்கெட்டுகளை எடுக்க முன்பு முன்வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்று முதல் ஆன் லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏராளமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதனால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இரயில்களில் தீபாவளிக்கு செல்பவர்கள் முன்பதிவு செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பேருந்துகளிலும் முன்பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version