சினிமா செய்திகள்
தீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்!
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத் தமிழன் திரைப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகிபாபு நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அந்த படத்தை தயாரித்துள்ள விஜயா புரடொக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், சங்கத்தமிழன் ஃபர்ஸ்ட் சிங்கிளான கமலா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். ஏற்கனவே இருவரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.