கேலரி

நடிகைங்க உங்கிட்ட பிச்ச வாங்கணும்!…சிவப்பு கலரில் செமயா போஸ் கொடுத்த டிடி…

Published

on

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிரந்தர தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. குறிப்பாக இவர் நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்களிடம் அவர்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகளை கூட நாசுக்காக கேட்டு பதிலை வாங்கி விடுவதில் கெட்டிக்காரர்.

தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அதன்பின் பவர் பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தார்.

தற்போது சிங்கிளாக வாழ்ந்து வரும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். மேலும், அவ்வப்போது எதையாவது செய்து வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். மேலும், தனது புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அந்தமான் தீவுக்கு சென்ற அவர் அங்கு கிளுகிளுப்பான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

தற்போது சிவப்பு நிற உடையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறாது.

seithichurul

Trending

Exit mobile version