இந்தியா

வாக்கிங் போன நீதிபதி வாகனம் இடித்துக் கொலை – அதிர்ச்சி வீடியோ…

Published

on

ஜார்க்ண்ட் மாநிலம் தன்பாத் நகரில் வசித்து வருபவர் உத்தம் ஆனந்த். இவர் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரை குறி வைத்து சரக்கு ஒரு வாகனம் இடித்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. முதலில் இவர் விபத்தில் மரணமடைந்ததாகவே கருதப்பட்டது. சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியான நிலையில், இவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ சஞ்சீங்கின் உதவியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கை இவர் விசாரித்து வந்தார். சமீபத்தில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் அமன் சிங் என்பவரின் கும்பலை சேர்ந்த 2 பேரின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். இவர்கள் உத்தரபிரதேசத்தில் பல குற்றங்களை செய்தவர்கள்.

இந்த நிலையில்தான் நீதிபதி உத்தம் ஆனந்த் சரக்கு வாகனம் இடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version