உலகம்

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

Published

on

கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வந்த நிலையில் இன்னொரு நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பிளிப்கார்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சமீப காலமாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி நிறுவனம் தனது 4000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் தனது பணியாளர்களில் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனத்தை மறு சீரமைக்கவும் பட்ஜெட்டை குறைக்கவும் முயற்சி செய்கிறது என பிசினஸ் இன்சைடர் என்ற ஊடகம் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி உள்ளனர்.

ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களை அடையாளம் காணுமாறு நிறுவனத்தின் மேலாளர்களை மேலிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பணியாளர்கள் ஒவ்வொரு தொகுதிகளாக பணி நீக்கம் செய்யப்படுவார்களா? அல்லது 4000 ஊழியர்களும் ஒரே நேரத்தில் மொத்தமாக பணணிக்கம் செய்யப்படுவார்களா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.

மேலும் ஏப்ரல் 3ஆம் தேதி அன்று டிஸ்னியின் வருடாந்திர கூட்டத்தொடர் நடைபெற இருப்பதை அடுத்து முன்பே வேலை நீக்க நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுவதால் ஏப்ரல் ஒன்றாம் தேதியே வேலை நீக்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஏற்கனவே உலகின் பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதால்க் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது டிஸ்னி நிறுவனம் ஒரே நேரத்தில் 4000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் அவர்கள் கூறிய போது ’மறு சீரமைப்பு மற்றும் செலவை குறைக்க வேண்டிய அவசியத்தில் நாங்கள் உள்ளோம் என்றும் எங்கள் வணிகங்களை மிகவும் திறமையாக நடத்துவதற்கு நாங்கள் சில நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். சவாலான இந்த பொருளாதார சூழ்நிலையில் அதற்கேற்ற வகையில் நிறுவனத்தை லாபத்துடன் கொண்டு செல்வது என்பதும் மிகப் பெரிய சவால் என்றும் அவர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version