சினிமா
10 மார்வெல் சீரிஸ், 10 ஸ்டார்வார் சீரிஸ், 15 டிஸ்னி படங்கள்- வேகம் காட்டும் டிஸ்னி நிறுவனம்!
அடுத்தடுத்து 10 மார்வெல் சீரிஸ்கள், 10 ஸ்டார்வார் சீரிஸ்கள், 15 டிஸ்னி படங்கள் எனத் தொடர்ந்து படங்கள் மற்றும் சீரிஸ்களை வெளியிட உள்ளதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
டிஸ்னி தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்தடுத்த வெளியீடுகள் குறித்த அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் சுமார் 10 மார்வெல் சீரிஸ்கள், 10 ஸ்டார் வார்ஸ் சீரிஸ்கள், 15 டிஸ்னி ஆக்ஷன் திரைப்படங்கள், 15 பிக்சர் சீரிஸ்கள், டிஸ்னி அனிமேஷன் படங்கள் என வரிசையாகத் தயாராகிக் கொண்டு உள்ளதாக டிஸ்னி அறிவித்துள்ளது.
இத்திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் அனைத்துமே நேரடியாகவே டிஸ்னி ப்ளஸ் தளங்களில் வெளியாகும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி சர்வதேச அளவில் 137 மில்லியன் பயனாளர்கள் டிஸ்னி ப்ளஸ் தளங்களில் சந்தாதாரர்களாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் அதிகமான வெளியீடுகளை ஆண்டு தோறும் மேற்கொள்ளப்போவதாகவும் டிஸ்னி அறிவித்துள்ளது.
— Disney (@Disney) December 11, 2020