உலகம்

டுவிட்டரில் விரைவில் டிஸ்லைக் பட்டன்: ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்!

Published

on

சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் டுவிட்டரில் விரைவில் டிஸ்லைக் பட்டன் வரவிருப்பதாகவும் ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெரும்பாலான சமூக வலைதளங்களில் லைக்ஸ், டிஸ்லைக் ஆகிய இரண்டு பட்டன்களும் உள்ளன என்பதும், ஒருவருடைய பதிவுக்கு கிடைக்கும் லைக்ஸ்கள் மற்றும் டிஸ்லைக்ஸ்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டுவிட்டரில் லைக், ஷேர், ரிடுவிட் மற்றும் கமெண்ட்ஸ் ஆகிய நான்கு பட்டன்கள் மட்டுமே தற்போது இருக்கும் நிலையில் விரைவில் டிஸ்லைக் பட்டன் வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் இந்த டிஸ்லைக் பட்டனை அழுத்தி டிஸ்லைக் மட்டுமே செய்யலாம் என்பதும், எத்தனை பேர்கள் டிஸ் லைக் செய்துள்ளார்கள் என்பதை மற்றவர்கள் பார்க்க முடியாது என்றும் ட்வீட்டை பதிவு செய்தவர் மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக டிஸ் லைக் பட்டன் ஐஒஎஸ் பயனாளிகளுக்கு மட்டும் கிடைக்க இருப்பதாகவும் அதன் பின்னர் படிப்படியாக ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு புதிய அம்சங்களை தங்களுடைய பயனாளர்களுக்கு கொடுத்து வரும் நிலையில் தற்போது டிஸ்லைக் பட்டன் என்ற புதிய அம்சத்தையும் தரவுள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version