உலகம்

பெட்ரோல் போட்டவுடன் பணத்தை தூக்கி எறியும் கார் ஓனர்.. கண்ணீருடன் பொறுக்கும் இளம்பெண்.. வைரல் வீடியோ..!

Published

on

எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அந்த மனிதரிடத்தில் மனித நேயம் இல்லை என்றால் அவர் மனித லிஸ்டிலேயே இருக்க மாட்டார் என்பதுதான் அனைவரும் கூறப்படும் அறிவுரையாக உள்ளது. பணம் இருக்கலாம், அழகு இருக்கலாம், அறிவு இருக்கலாம் ,புத்திசாலித்தனம் இருக்கலாம், ஆனால் சக மனிதனிடம் காட்டப்படும் மனிதநேயம் இல்லை என்றால் அவர் மிருகத்துக்கு சமம் என்றுதான் நமது முன்னோர்கள் கூறி வருகின்றனர்.

மனிதனை மனிதன் மதிக்கத் தெரியாதவர்கள் மனிதனாகவே இருக்க தகுதியற்றவர் என்றும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார் உரிமையாளர் ஒருவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பும் பெண்ணிடம் கையில் காசு கொடுக்காமல் பணத்தை தூக்கி எறிந்து விட்டு செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார் ஒன்று நிற்கிறது. இதனை அடுத்து பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் அந்த ஆடம்பர சொகுசு காருக்கு பெட்ரோல் நிரப்புகிறார். அதன் பிறகு அவர் பணத்திற்காக அந்த கார் ஓட்டுநரிடம் கையேந்திய போது பணத்தை அந்த நபர் கையில் கொடுக்காமல் தூக்கி எறிந்து விட்டு காரை நகர்த்துகிறார்.

ஒரு கணம் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் அதன்பின் கண்ணீருடன் அந்த பணத்தை பொறுக்கிய பின்னர் கண்ணீரை துடைத்துக் கொள்ளும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்தாலும் அந்த பெண்ணும் என்று ஒரு மனம் இருக்கிறது, சுயமரியாதை இருக்கிறது, ஆனால் அந்த பெண்ணை ஒரு மனிதனாகவே மதிக்காத அந்த கார் உரிமையாளர் பணத்தை தூக்கி விட்டு சென்ற வீடியோவுக்கு இணையதளவாசிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் குறிப்பாக அந்த பெண் கண்ணீரை துடைப்பதை பார்த்துக்கும் பொழுது மனம் கனக்கிறது என்றும் ஒருவர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துள்ளார். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், புத்திசாலித்தனமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே மாதிரி தான் இந்த உலகை விட்டு செல்கிறோம். நாம் இறந்த பிறகு நம்மிடம் உள்ள பணம் உடன் வராது. எனவே மற்றவர்களை மரியாதையாக நடத்த கற்றுக் கொள்ளுங்கள் என்று இன்னொரு நபர் கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ ஒரு சில மணி நேரங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version