இந்தியா

சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

Published

on

சட்டவிரோதமாக கடன் கொடுக்கும் செயலிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செயலிகளை முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

சட்டவிரோதமாக செயலிகள் மூலம் கடன் கொடுத்து அநியாய வட்டி வாங்கும் செயல்கள் குறித்து அடிக்கடி புகார் வந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இந்த செயல்களில் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து விட்டதாகவும் ஒரு சிலர் உயிரை மாய்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் சட்டவிரோதமாக கடன் வழங்கும் 600 மொபைல் செயலி கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இவற்றில் 27 செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக இந்திய ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது.

பண மோசடியில் ஈடுபடும் செயலிகளுக்கு எதிராக சுமார் 2500 புகார்கள் பெறப்படுள்ளதாகவும் அதிகபட்சமாக 570 புகார்கள் மேல் மகாராஷ்டிராவில் இருந்து மட்டுமே பெறப்படுள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகளை முடக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version