இந்தியா

சென்னையில் புதிய விமான நிலையம்? எங்கே? எவ்வளவு தொலைவு? பயண நேரம் எவ்வளவு?

Published

on

சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசு பரிந்துறைத்ததை திருப்போரூர், பாரந்தூர், பன்னூர், படலம் உள்ளிட்ட 4 இடங்களில் 2 இடங்களை மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தேர்வு செய்துள்ளது.

சென்னை புறநகரில் புதிய விமான நிலையம் அமைக்க அண்மையில் தமிழ்நாடு அரசு 4 இடங்களைத் தேர்வு செய்து மத்திய விமான போக்குவரத்து ஆணையத்துக்கு பரிந்துரைத்தது.

இப்போது அந்த 4 இடங்களில் பரந்தூர், பன்னூர் உள்ளிட்ட 2 இடங்களை மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டில் ஒரு இடத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பரந்தூர், பன்னூரில் விமான நிலையம் அமைந்தால் எவ்வளவு தொலைவு இருக்கும்? பயணம் நேரம் எவ்வளவு ஆகும் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பன்னுர் சென்னை விமான நிலையத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது உள்ள விமான நிலையத்திலிருந்து பன்னூரில் விமான நிலையம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்குச் செல்ல 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகலாம். அதுவே சென்னை சென்ட்ரலில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பயண நேரம் 1 மணி நேரம் 45 நிமிடம் ஆகும். கிண்டியிலிருந்து பன்னூர் செல்ல 56 கிலோ மீட்டர். 1 மணி நேரம் 25 நிமிடம் ஆகும்.

பரந்தூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அங்குச் செல்ல 70 கிலோ மீட்டர் தொலைவு. 2 மணி நேரம் ஆகும். கிண்டியிலிருந்து 64 கிலோ மீட்டர், 1.45 மணி நேரம் ஆகும். தற்போது உள்ள விமான நிலையத்திலிருந்து செல்ல 1.30 மணி நேரம் ஆகும் (60 கிலோ மீட்டர்).

seithichurul

Trending

Exit mobile version