தமிழ்நாடு

’மிக மிக அவசரம்’, ’அங்காடித்தெரு’: அடுத்தடுத்து நனவாகும் இயக்குனர்களின் கனவு!

Published

on

’மிக மிக அவசரம்’ மற்றும் ’அங்காடித்தெரு’ ஆகிய இரண்டு படங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்தை தற்போது தமிழக அரசு நிறைவேற்ற இருப்பதை அடுத்து திரைப்பட இயக்குனர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,

’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படத்தில் பெண் போலீசார் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் ஏற்படும் சிக்கல்களை பற்றி மிக அருமையாக கூறியிருந்தார். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசு, சாலைப் பணிகளில் இனி பெண் போலீசார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என அறிவிப்பு செய்தது.

அதேபோல் ’அங்காடித்தெரு’ திரைப்படத்தில் நின்று கொண்டே பணி செய்யும் ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் குறித்து இயக்குனர் வசந்தபாலன் கூறியிருந்தார். அதனை அடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக கடைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கைகள் அமைக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது,

இதனை அடுத்து திரைப்பட இயக்குனர்களின் கனவு நனவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ’மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய சுரேஷ் காமாட்சி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இருந்த நிலையில் இன்று அங்காடி தெரு இயக்குநர் வசந்தபாலன் தனது நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“தமிழக அரசுக்கு நன்றி.என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன் உங்களுக்கு நினைவிருக்கலாம்,

Trending

Exit mobile version