சினிமா செய்திகள்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் திடீரென புகாரளித்த இயக்குனர் தங்கர்பச்சான்!

Published

on

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் சற்று முன்னர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர்பச்சான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஒளிப்பதிவு சீர் திருத்த சட்டத்தை தங்கர்பச்சான் ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு செய்தி பரவி வந்தது.

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த தங்கர்பச்சான், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புதிய ஒளிப்பதிவு சீர்திருத்தச் சட்டத்தை நான் கடுமையாக எதிர்த்து வருகிறேன் என்றும் இதுகுறித்து தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன் என்றும் கூறிய தங்கர்பச்சான் ஆனால் உண்மைக்கு மாறாக புதிய ஒளிபரப்பு சீர்திருத்த சட்டத்தை நான் ஆதரிக்கிறேன் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கூட நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் மத்திய அரசையும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அமைச்சர்களையும் கடுமையாக தங்கர்பச்சான் தாக்கி விமர்சனம் செய்தார். இந்த நிலையில் அவர் இந்த சட்டத்தை ஆதரிப்பதாக வதந்தி எழுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது

தங்கர்பச்சானின் புகாருக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version