சினிமா செய்திகள்

பிரபல தமிழ் இயக்குனர் கொரோனாவுக்கு பலி! திரையுலகினர் அதிர்ச்சி!

Published

on

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா என்பவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர் தயாரித்த ரெட்டைச்சுழி மற்றும் சமுத்திரகனி நடித்த ஆண்தேவதை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் தாமிரா. இதில் ரெட்டச்சுழி திரைபடத்தில் பாலச்சந்தர் பாரதிராஜா ஆகிய இருவரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் திரையுலக வட்டாரத்தில் நல்ல பெயரைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் தாமிரா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் இதனை அடுத்து சிகிச்சையின் பலனின்றி சற்று முன்னர் அவர் காலமானதாக செய்திகள் வெளியானது.

இந்த செய்தியால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version