சினிமா

‘இந்தியன்2’: எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் கொடுத்த ஷங்கர்!

Published

on

இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன்2’ படம் குறித்து எக்ஸ்க்ளூசிவ்வான அப்டேட்களை கொடுத்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘இந்தியன் 2’. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் கொரோனா மற்றும் வேறு சில பிரச்சனைகள் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு இப்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னையில் நடந்துள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த கட்டத்திற்கு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று படமாக்க இருக்கிறார்கள். இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு படம் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

‘இந்தியன்’ படத்தை காட்டிலும் அதன் இரண்டாம் பாகமான இதில் ‘இந்தியன்’ தாத்தாவிற்கான போர்ஷன் அதிகம் இருப்பதாகவும் படக்குழு சொல்கிறது. இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படம் குறித்து சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் ஷங்கர் எக்ஸ்க்ளூசிவ்வானத் தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ஜூன் மாதத்துடன் வசனக் காட்சிகள் முடிந்துவிடும். அதன் பிறகு பாடல் மற்றும் VFX பணிகள் முடிந்து படம் வெளியாகும். இந்தப் படத்தின் இசையமைப்பாளரான அனிருத்திடம் ஒரு குட்டிப் பாடல் கேட்டிருக்கிறேன். அது தயாரானதும், `இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ வெளியாகும்’’ என்று கூறி இருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version