சினிமா செய்திகள்

சிம்புவுடன் ஜோடி சேரும் ஷங்கர் மகள்!

Published

on

நடிகர் சிம்புவுடன் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் இணைய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தொடர்ந்து சிம்பு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு நீண்ட காலமாகத் தயாரிப்பில் உள்ள பத்து தல படத்தில் நடிக்க உள்ளார்.

அந்த படங்களைத் தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில், சிம்பு கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இப்போது அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிதி இப்போது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கு வரும் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில் இரண்டாம் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிதி சிம்புவுடன் நடிப்பாரா என்ற தகவலை தெரிந்துகொள்ளத் தொடர்ந்து www.bhoomitoday.com இணையதளத்தைப் படியுங்கள்.

Trending

Exit mobile version