சினிமா

கமலை அறிமுகப்படுத்திய இயக்குனர் மரணம்… திரையுலகினர் சோகம்…

Published

on

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சகலகலா வல்லவனாக மாறியவர் நடிகர் கமல்ஹாசன் . இவரின் வளர்ச்சிக்கு இயக்குனர் பாலச்சந்தருக்கு பெரும் பங்கு உண்டு.

ஆனால், அவர் மட்டுமில்லை அவரை தூக்கிவிட்ட பல இயக்குனர்கள் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். கே.விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலுமகேந்திரா, பாரதிராஜா என பெரிய பட்டியலே இருக்கிறது.

தொடக்கத்தில் தமிழை விட மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்தவர் கமல்ஹாசன். அங்குதான் அவர் ஹீரோவாகவே மாறினார். அவரை மலையாளத்தின் மூத்த இயக்குனர் K.S சேதுமாதவன் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 90. தமிழில் கமல் நடித்த நம்மவர் படத்தை இயக்கியதும் சேதுமாதவன் தான். இவர் எம்ஜிஆர் நடித்த ‘நாளை நமது’ படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன் ‘காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்.’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version