சினிமா செய்திகள்

‘வலைப்பேச்சு’ வீடியோவில் பொய்ச்செய்தி: இயக்குனர் ரவிகுமார் கண்டனம்!

Published

on

வலைப்பேச்சு வீடியோவில் நடக்காத ஒன்றை நடந்ததாக பொய் செய்தி பதிவு செய்யப்பட்டிருப்பதாக ’நேற்று இன்று நாளை’ ’அயலான்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யூட்யூபில் வலைப்பேச்சு என்ற வீடியோ கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தினமும் சினிமா செய்திகளை 3 பத்திரிகையாளர்கள் அதில் கூறிக் கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கூறப்படும் பெரும்பாலான செய்திகள் உண்மையாக இருந்தாலும் ஒரு சில செய்திகள் பொய்யானவை என்று ஏற்கனவே விமர்சனம் எழுவது உண்டு .

இந்த நிலையில் நேற்றைய வலைப்பேச்சு வீடியோவில் நாம் தமிழர் கட்சியின் சீமானை இயக்குனர் ரவிக்குமார் அவமதித்ததாக கூறப்பட்டது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து ரவிக்குமாருக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல. நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிக பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தயாரிப்பாளர் வினோத் என்பவர் டுவிட்டர் ஸ்பேஸில் வலைப்பேச்சு குறித்து தனது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version