சினிமா செய்திகள்

குரல்வளையை நெறித்தால் ‘ஜெய்ஹிந்த்’ கூட சொல்ல முடியாது: இயக்குனர் ராஜூமுருகன்

Published

on

மத்திய அரசு அமல்செய்ய திட்டமிட்டுள்ள புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவிற்கு திரையுலகினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகர் சூர்யா, கார்த்தி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் பூச்சி முருகன், விஷால் உள்பட பலரும் இது குறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ’ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராஜுமுருகன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: குரல்வளை நெறிக்க படும்போது எங்களால் ஜெய்ஹிந்த் கூட சொல்ல முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் மன்னரே’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்து கூறியதாவது: வருங்காலத்தில் நல்ல கருத்து சொல்கிற படங்களை எடுக்கவே முடியாது என்றும் ஒன்றிய அரசின் எண்ணங்களுக்கு ஏற்ப படங்களை எடுக்க வேண்டும் என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய ஒளிபரப்பு மசோதாவுக்கு பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து கூறி விளம்பரம் தேடி கொள்வதற்கு பதிலாக ஏற்கனவே காலக்கெடு கொடுத்திருந்த நேரத்திற்குள் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய இடத்தில் தெரிவித்து இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version